ஒடிசாவைச் சேர்ந்த நடிகையும் , பாடகியுமான ருச்சிஸ்மிதா குரு கடந்த 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
சோனேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது உடல் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
இந்த சம்பவம் தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ருச்சிஸ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்துள்ள பாலங்கிர் போலீசார் கடந்த 2 நாள்களாக ருச்சிஸ்மிதா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு ஆலு பரோட்டா செய்ய தாமதமாகும் என்று கூறியதால் ருச்சிஸ்மிதா தன்னுடன் சண்டை போட்டதாக அவரது தாயார் இன்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் ருச்சிஸ்மிதாவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் இன்னும் உறுதிபடுத்தவில்லை. அவர் தற்கொலை செய்ததற்கு தாயுடன் ஏற்பட்ட சண்டை காரணமா? அல்லது இந்த மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் நடிகையும், பாடகியுமாக கருதப்பட்ட ருச்சிஸ்மிதா பல்வேறு ஒடியா ஆல்பம் பாடல்களில் பாடி நடித்துள்ளார். மேலும் விடுமுறைக்காக பலங்கிரில் உள்ள தன் மாமா வீட்டிற்குச் சென்றபோது தற்போது தற்கொலை செய்துள்ளார்.
சமீபத்தில் போஜ்புரி திரைப்பட நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்த நிலையில், தற்போது ஒடிசா பாடகியும், நடிகையுமான ருச்சிஸ்மிதா குருவின் மரணச் செய்தி திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக கூறிய விவகாரம்: போலீஸ் விளக்கம்!