கேரவனில் ரகசிய கேமரா… ராதிகா கிளப்பிய பகீர்… இவ்வளவு நாள் மௌனமாக இருந்தது ஏன்? எழும் கேள்வி
மலையாள படப்பிடிப்பின் போது, கேரவனுக்குள் கேமரா பொருத்தி நடிகைகளை வீடியோ எடுத்ததாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராதிகா கூறுகையில், ”மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது.
கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று. இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அதன் பிறகு கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்தேன். அந்த நடிகை உடை மாற்றும் வீடியோ தற்போதும் இணையத்தில் பெயரோடு வருகிறது. மேலும், பல நடிகைகள் வேட்டைக்காரர்களுக்கு பயந்து எனது அறையில் வந்து தங்கிக் கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரியான மோசமான சம்பவத்தை பார்த்த ராதிகா சரத்குமார், இதுவரை இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தது ஏன்? என டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை ராதிகா போன்றவர்களே இது போன்ற சம்பவங்களை தடுக்க முயலாமல் இவ்வளவு நாள் கழித்து வெளியே கூறியது வியப்பையே தருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கடத்தியவரை கட்டிப்பிடித்து அழுத குழந்தை… தாயுடன் செல்ல மறுத்த ஆச்சரியம்!
குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!