சீமான் பிளேலிஸ்டில் மல்லிப்பூ பாடல்!

சினிமா

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை அண்மைக் காலமாக ஓய்வு நேரங்களிலும், பயணங்களிலும் அதிக முறை கேட்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ntk leader seeman appreciate vtk movie mallipoo song

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக மல்லிப்பூ பாடல், படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மல்லிப்பூ பாடல் கடந்த வாரம் ஸ்பாட்டிபை மியூசிக் தளத்தில் முதல் இடம் பிடித்தது.

இந்தநிலையில், மல்லிப்பூ பாடல் குறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில்,

என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து, அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.

ntk leader seeman appreciate vtk movie mallipoo song

கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும்,

அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர்,

அன்பு சகோதரன் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர்  மோகன் பகவத் 

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *