சர்வதேச அங்கீகாரம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ்

Published On:

| By christopher

சோவியத் ரஷ்யாவில் கினோபிராவோ திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில்  தேர்வு செய்யப்படும் சிறந்த திரைப் படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுவது வழக்கம்.

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் தயாராகி இந்த வருடம் தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள குணா குகையை மையப்படுத்தி திரைக்கதை எழுதப்பட்ட இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது.

தமிழ்நாட்டில் வெளியான மலையாளப் படங்களில்அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்தது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.உலகளவில் ரூ.240 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில், சோவியத்ரஷ்யாவில் கடந்த 28ஆம் தேதி துவங்கிய கினோபிராவோ திரைப்பட விழாவில் இன்றும், நாளையும் (செப்டம்பர்30, அக்டோபர்1)மஞ்சுமெல் பாய்ஸ் படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையை ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

ஆயுத பூஜை பொரி: மூட்டைக்கு ரூ.100 வரை உயர்வு!

ஹெல்த் டிப்ஸ்: ஒல்லியாக இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்களா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel