சினிமாவில் மொழி தடைகள் இல்லை : ஐஸ்வர்யா ராய்

சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ தமிழ் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

அவரது இயக்கத்தில் ராவணன் படத்திலும் நடித்திருந்தார். மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

பொன்னியின் செல்வன் நாவலில் கதையை நகர்த்திச் செல்லும் வந்தியதேவனுக்கு இணையான கதாபாத்திரம் நந்தினி எனும் கேரக்டர், முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்போம், அதுவும் குழந்தைக்கு தாயாக நடிக்க மாட்டோம் என்பார்கள் தற்போதைய கதாநாயகிகள்.

இவை இரண்டையும் புறந்தள்ளி பழுவேட்டரையராக நடித்திருக்கும் சரத்குமாருக்கு ஜோடியாக அழகும், வில்லத்தனமும் நிறைந்தவராக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.

செப்டம்பர் 30 அன்று பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வந்தது.

அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர்கள், வட இந்திய மற்றும் தென் இந்தியத் திரைப்படங்கள் எனப் பிரித்துப் பார்ப்பது குறித்து கேள்வி கேட்டனர்

அதற்குப் பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராய்,

இந்திய சினிமாவுக்கு இது ஒரு அற்புதமான நேரம், ஏனென்றால் பார்வையாளர்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்.

திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தொழில்களுக்கு இடையே உள்ள மொழித் தடைகள் தற்போது இல்லை.

சினிமா கலைஞர்களையும், சினிமாவையும் மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் வழக்கமான முறையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும்.

‘ஆர்.ஆர்.ஆர்’, ‘புஷ்பா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ போன்ற பல தென்னிந்தியப் படங்கள் சமீப காலங்களில் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த சில மாதங்களாக இந்தி அல்லாத பல படங்கள் வணிகரீதியாக பாக்ஸ்ஆபீஸில் வெற்றிபெற்றுள்ளன.

புஷ்பா,ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

நம் சினிமாவை தேசிய அளவில் மக்கள் அறிவார்கள். இந்தியா முழுவதும் உள்ள சினிமாவை அனைவரும் பார்க்கலாம்.

நாடு முழுவதிலும் இருந்து மக்கள் சினிமாவை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த மொழித் தடைகள் எல்லாம் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்

நள்ளிரவு முதல் சென்னையில் மழை!

பிக்பாஸ் சீசன் 6 எப்போது?: போட்டியாளர்களின் உத்தேச பட்டியல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *