பள்ளி விளையாட்டு தின விழாவில் பரிசு வென்ற தனது மகன்கள் குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை படத்தையும் இயக்கினார்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த பயணி என்ற இசை வீடியோ ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து தற்போது ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இப்படத்தில் அவரது தந்தையும், நடிகருமான ரஜினிகாந்த் முக்கிய வேடத்திலும், கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
தனது பட வேலைகளுக்கிடையே மகன்கள் யாத்ரா, லிங்காவை அடிக்கடி சந்தித்து அதனை சமூகவலைத்தள பக்கங்களில் ஐஸ்வர்யா பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யா தனது தாயார் லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், “எந்த சூரியனாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டு மீதான உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். வெயிலில் குளிக்கும் என் மகன்களின் பிரகாசத்தை கண்டு புன்னகைத்தபடி நான் நின்றுகொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் தனது மகன்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
தாயின் பிரிவால் கலங்கி நின்ற பன்னீர்… நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!