நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கோவாவில் கடந்த 12ம் தேதி இந்து முறைப்படி நடைபெற்றது. மாப்பிள்ளை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்தது,. திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் தனது மகள் திருமணம் குறித்து கூறியிருப்பதாவது, ‘திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அங்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இளையவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். ஒவ்வொரு ஏற்பாடும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. எல்லாமே சிறப்பாக நடந்தது. 12 ஆம் தேதி காலையில் இந்து ஐயங்கார் முறைப்படியும் மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் சிறப்பாக நடந்தது.
இன்னும் 10 நாட்களில் கீர்த்தி சுரேஷ் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவார். ஓடிடியில் வெளியிடுவது குறித்து ஐடியா இருப்பதாக தெரியவில்லை. இதற்கு முன்னர் திரைப்பட திருவிழாக்களில் பங்கேற்கத்தான் நான் கோவா சென்றுள்ளேன். ஆனால், இப்போது எனது மகளின் திருமணத்துக்காக கோவாவில் தங்கியிருந்தது நல்லதொரு அனுபவமாக இருந்தது.
இந்த திருமணம் நடப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. 15 வருட காதல், அதை உடைக்க யாருக்கு மனம் வரும்? எனது மகள் யாரை விரும்புகிறாளோ , காதலிக்கிறாளோ அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பதுதான் ஒரு தந்தையின் கடமை. அந்த கடமையை நான் சரியாக செய்துள்ளேன். புது மண தம்பதிக்கு வருங்காலத்தில் சிறப்பான எதிர்காலம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு, நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளாரா ? என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது. தற்போது அவர் வசம், ரிவால்வர் ரீட்டா , கண்ணிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. கீர்த்தி சுரேஷ், புதிய எந்த படங்களிலும் கமிட் ஆகாததால் ஒரு வேளை சினிமாவை விட்டு விலகவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு!
அல்லு அர்ஜுனுக்கு அடுத்த சிக்கல் : சிகிச்சை பெற்ற சிறுவன் மூளைச்சாவு!