மருத்துவ அறிவில்லை… சிறையில் தள்ள வேண்டும் : மருத்துவரின் பதிவுக்கு சமந்தா பதில்!

Published On:

| By Kavi

தன்னை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறிய மருத்துவருக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது தனது உடல்நலனில் கவனம் செலுத்தும் சமந்தா, உடல் மற்றும் மன நலன் குறித்த பதிவுகளை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சுவாச தொற்றிலிருந்து காக்கும் வகையில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் உள்ளிழுப்பானை பயன்படுத்துவது தொடர்பாக சமந்தா பதிவிட்டிருந்தார்.

இதற்கு Hepatologist மருத்துவர் பிலிப்ஸ், சமந்தாவை கடுமையாக சாடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “செல்வாக்குமிக்க இந்திய நடிகையான சமந்தா உடல்நலம் மற்றும் மருத்துவ அறிவில்லாதவர்.

அவரை மில்லியன் கணக்கானவர்கள் பின் தொடரும் நிலையில் சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை உள்ளிழுக்க அறிவுறுத்துகிறார்.

அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான அறக்கட்டளை, ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்து சுவாசிக்க வேண்டாம். அது உடல்நலத்திற்கு ஆரோக்கியமற்றது என எச்சரிக்கிறது.

Image

விஞ்ஞான ரீதியாக முற்போக்கான சமூகத்தில், இந்த பெண் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வேண்டும். அவருக்கு சிறந்த ஆலோசனை தேவை.

இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களிடம் இருந்து மக்களை காக்குமா அல்லது அவை முதுகெலும்பில்லாமல் மக்கள் இறக்க அனுமதிக்குமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இவரது பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகை சமந்தா, “கடந்த இரு ஆண்டுகளாக நான் பலவகையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

தகுதி வாய்ந்த நிபுணர்களின் ஆலோசனையின்படி மற்றும் என்னைப் போன்ற ஒரு சாதாரண நபர் முடிந்தவரை சுய ஆராய்ச்சி செய்த பிறகு இதை எடுத்துக்கொண்டேன்.

இந்த மருந்துகள் அனைத்தும் விலை மதிப்புடையது. இவற்றை பெறுவதற்கு என்னால் செலவு செய்ய முடிந்தது. ஆனால் இவற்றை முடியாதவர்களை எண்ணி வருந்துவேன்.

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன தெரிந்துகொண்டேனோ, அதை ஒரு நல்ல எண்ணத்தில் தான் பரிந்துரை செய்தேன்.

Image
பிலிப்ஸ்

இந்த சிகிச்சை ஒரு எம்.டி.யாக இருக்கும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் தான் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது. டிஆர்டிஓவில் அவர் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஆனால் ஒரு ஜென்டில்மேன் கடுமையான வார்த்தைகளால் என்னை பேசியுள்ளார். அந்த ஜென்டில்மேன் ஒரு மருத்துவரும் கூட. அவர் மருத்துவர் என்பதிலும், என்னை விட அவருக்கு அதிகம் தெரியும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

அவருடைய நோக்கம் சரியானது என நம்புகிறேன். ஆனால் அவர் கொஞ்சம் பார்த்து பேசியிருக்கலாம். என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதை நான் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

நான் ஒரு நட்சத்திரமாக இதைப் பதிவிடவில்லை. ஒரு சிகிச்சை கோரும் நபராகவே பதிவிட்டேன்.

யாரையோ அங்கீகாரிக்கவோ அல்லது பணத்துக்காகவோ பதிவிடவில்லை.
வழக்கமான மருத்துவ முறை வேலை செய்யாதவர்களுக்கு, குறைந்த விலையில் இருக்கும் இந்த சிகிச்சையை நான் பரிந்துரைத்தேன், அவ்வளவு தான்.

நான் பதிவில் குறிப்பிட்ட என் மருத்துவரை அவர் பணிவுடன் அழைத்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டு உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களுக்கு இடையிலான அந்த விவாதம் மற்றும் கலந்துரையாடலில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

எனது ஆரோக்கியத்திற்கு உதவிய சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுவதே எனது நோக்கமாக இருப்பதால் நான் மிகவும் கவனமாக இருப்பேன். யாருக்கும் தீங்கு செய்ய அல்ல” என நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

இன்று தொடங்கும் டிஎன்பிஎல்: எங்கு, எப்போது தெரியுமா?

குபேரா… ராஷ்மிகாவின் முதல் தோற்றம் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share