விஜய் படத்தில் நிவின்பாலி?

சினிமா

நடிகர் விஜய்  வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இந்தப் படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் 67வது படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துவருகிறது.

இந்த படத்தை மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ஏற்கெனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிருத்வி ராஜ் மற்றும் இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது,

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நடிப்பதாகச் செய்திகள் வெளியானது.

இதை உடனடியாக நிவின்பாலி தரப்பினர் மறுத்துள்ளனர். இது சம்பந்தமாக நிவின்பாலி வட்டாரத்தில் விசாரித்தால், இப்படியெல்லாம் தகவல்கள் தமிழ் சினிமாவிலும், தமிழ் ஊடகங்களிலும்தான் வருகின்றன,

மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் கதாநாயகன் தமிழ் நடிகர் நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பாரா என்பதையெல்லாம் யோசிக்க மறந்துவிடுகின்றனர் என்கின்றனர்.

விஜய் 67 படத்தில் நடிக்கப்போவது யார் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் வரை இதுபோன்ற வதந்திகள் ரெக்கைகட்டி வந்து கொண்டேதான் இருக்கும் என்கின்றனர் செவன்ஸ் கிரீன் தயாரிப்பு வட்டாரத்தில்.

இராமானுஜம்

விராட் கோலியின் படத்தை வரைந்த பாகிஸ்தான் ரசிகர்!

கோகைன் போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *