மலையாள படமான 19/1/A படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன் – விஜய் சேதுபதி தமிழ்படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் சூர்யா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் புதிய படங்கள் எதையும் இயக்கவில்லை.
இந்நிலையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார்.. இந்தப் படத்தை சத்ய ஜோதிபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தவிர்த்து பிற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படாத நிலையில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!
கிச்சன் கீர்த்தனா : பசலைக்கீரை கட்லெட்!
இந்தியன் 2 தோல்வி குறித்து ஆய்வு… அப்டேட் குமாரு
பெண் போலீசாருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்