கடந்த 2011 ஆம் ஆண்டு 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நித்யாமேனன் அதனை தொடர்ந்து வெப்பம், உஸ்தா ஹோட்டல், பெங்களூர் டேஸ், காஞ்சனா 2, 24, ஓகே கண்மணி போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஃபேவைரட் ஹீரோயினாக இடம் பிடித்து விட்டார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில், அடுத்ததாக அறிமுக இயக்குனர் காமினி இயக்கத்தில் “டியர் எக்ஸஸ்” என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
பேண்டஸி ரொமான்ஸ் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிர்திக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது நித்யா மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு “டியர் எக்ஸஸ்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
இந்த போஸ்டரில் நித்யா மேனன் மிக ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து கொண்டு கையில் ஒரு போனில் அவரது எக்ஸுக்கு கால் செய்வது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படம் காதலில் பலமுறை தோற்ற ஒரு பெண்ணைப் பற்றிய கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைவர் 171 : ரஜினிக்கு ஜோடி இவங்களா?
பியூட்டி டிப்ஸ்: முன்னந்தலையில் முடி கொட்டாமல் இருக்க…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு