ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டியுள்ளார்.
காந்தாரா திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மலைப்பகுதியில் வசிக்கும் பூர்வக்குடி மக்கள் பற்றியும் நாட்டார் தெய்வ வழிபாடுகள் குறித்தும் காந்தாரா திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
கங்கணா ரணாவத், நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு பாராட்டியிருந்தனர்.
அந்த வரிசையில் காந்தாரா திரைப்படத்தை பார்த்த பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,” தன்னார்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அடங்கிய குழுவுடன் பெங்களூரில் காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன். படம் அருமையாக உள்ளது. நமது வளமான பாரம்பரியத்தை படம் பிடித்து காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காந்தாரா திரைப்படம் வெளியாகிறது. இருப்பினும் காந்தாரா திரைப்படத்திற்கான திரையரங்குகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.
செல்வம்
தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!
சர்தார் இயக்குநருக்கு தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ்!