நடிகை ஐஸ்வர்யாராய் கணவர் அபிஷேக் பச்சன் மீது மனஸ்தாபத்தில் இருப்பதாக சமீப காலத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் விவகாரத்து செய்யப் போவதாகவும் பெரும்பாலும் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா தனது தாய் வீட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அபிஷேக்பச்சன் நிம்ரத் கவுர் என்ற பாலிவுட் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தஸ்வி படத்தில், அபிஷேக்குடன் நிம்ரத் இணைந்து நடித்தார். அப்போது, இருவரும் நெருங்கிப் பழகியதாக சொல்லப்பட்டது. இந்த படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த போது, அபிஷேக் பச்சன் சமீபத்தில் தங்களது 15வது திருமண நாளை கொண்டாடியதாக அபிஷேக் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நிம்ரத் கவுர் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது என்கிற கருத்தை முன் வைத்தார். இதற்கு, அபிஷேக் மறுப்பு தெரிவிக்காமல், நிர்மத் கவுரிடத்தில் தேங்க்ஸ் என்று கூறினார். இந்த வீடியோவை பார்த்து விட்டு பலரும் நிர்மத் கவுரை திட்டி தீர்த்தனர். ஐஸ்வர்யாவின் வாழ்க்கையுடன் நிர்மத் விளையாடுவதாகவும் கண்டித்தனர்.
இந்த நிலையில் , அபிஷேக்குடன் தனக்கு எந்த உறவும் இல்லையென்று நிர்மத் கவுர் தெரிவித்துள்ளார். மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிம்ரத் கவுர் இதற்கு முன்பு பலரை காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், யாரையும் திருமணம் செய்யவில்லை. தற்போது, 42 வயதான இவர் தனியாகவே வசித்து வருகிறார். இதுதான், அபிஷேக்குடன் அவரை இணைத்து பேச வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. வதந்திகள் எவ்வளவு பரவினாலும் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் இதுவரை தங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. மகள் பெரியவளாக வளர்ந்து விட்டதால், ஐஸ்வர்யா அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.
குமரேசன்
கே.வி.ஆனந்த் கற்றுத் தந்த பாடம்!
IPL : வெளியேறும் கே.எல். ராகுல்? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் 4 அணிகள்!