இவங்க ரெண்டு பேருல… வீட்டை விட்டு போகப்போற போட்டியாளர் யாரு?
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் டாப் 5 போட்டியாளர்கள் யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
இந்த வாரம் தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், அனன்யா, நிக்ஸன் மற்றும் விஷ்ணு என மொத்தமாக 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் அனன்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் மீதமிருக்கும் 5 போட்டியாளர்களில் யார் வாரயிறுதியில் வீட்டை விட்டு வெளியேறுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வீட்டை விட்டு தப்பிக்க முயற்சி செய்த கூல் சுரேஷா? இல்லை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நிக்ஸனா? என்பது தெரியவில்லை.
வாக்கெடுப்பின்படி கடைசி இரண்டு இடங்களில் சுரேஷ், நிக்ஸன் இருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
வெளியேறுவது ஒரு போட்டியாளர் என்றால் அது கூல் சுரேஷாக இருக்கலாம். அதுவே டபுள் எவிக்ஷன் என்றால் சனிக்கிழமை ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் என இரண்டு பேருமே வெளியேறுவார்கள்.
நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வாரயிறுதியில் சிங்கிள் எவிக்ஷன் நடக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.
வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து பார்த்தால் ஆக்ரோஷமான நிக்ஸனை விட, கூல் சுரேஷ் தான் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. என்றாலும் வழக்கம்போல நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: எடப்பாடிக்கு சம்மன்!
“ஆளுநரின் அப்பாவுடைய சொத்தை கேட்கவில்லை”: தமிழிசைக்கு உதயநிதி பதில்!