பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முக்கியமான போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிக்பாஸ் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் சடங்கினை நடத்த வழக்கம் போல போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்கள் மீதான வன்மத்தை கொட்டி தீர்த்தனர்.
This Week Nomination List
Who will be evict this week ?
with valid reasonsDouble Eviction ✅May be….#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggBossTamilSeason7 pic.twitter.com/2NIqwzHa2C
— Sekar 𝕏 (@itzSekar) December 11, 2023
இறுதியில் கூல் சுரேஷ், விஜே அர்ச்சனா, நிக்ஸன், தினேஷ், அனன்யா ராவ் மற்றும் விஷ்ணு விஜய் என இந்த வாரம் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இணைந்துள்ளனர்.
அதிசயமாக பூர்ணிமா இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். அவரோடு சேர்ந்து சரவண விக்ரம், மணி ஆகியோரும் எஸ்கேப் ஆனது தான் ஆச்சரியம்.
இந்த நிலையில் நீண்ட வாரம் நடைபெறாத டபுள் எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அர்ச்சனா விவகாரத்தால் நிக்ஸனும், பலவீனமான போட்டியாளராக இருப்பதால் அனன்யாவும் வீட்டைவிட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வழக்கம்போல வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிய, வாரயிறுதி வரை நாம் காத்திருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
வெள்ள நிவாரணம் : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது?: அமைச்சர் பேட்டி!