நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மணமகன் ஆதி தங்க நிற குர்த்தா உடையிலும், மணமகள் நிக்கி கல்ராணி தங்கம் மற்றும் பச்சை நிறம் கலந்த உடையில் தோற்றமளித்தார்கள். முன்னதாக நடந்த ஹல்தி விழாவில் நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ஆர்யா, சாயிஷா, சிரிஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வரவேற்பில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-அம்பலவாணன்