ரூ.1.60 கோடி பணத்தை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
இதற்கிடையே சென்னையை சேர்ந்த ஃபியூயல் டெக்னாலஜி எனும் நிறுவனம் கங்குவா படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அதாவது சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து 6.60 கோடி ரூபாய்க்கு ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனம் வாங்கியிருந்தது.
ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தவிர மற்ற இரண்டு படங்கள் தயாரிக்கப்படாததால், ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்திடம் வாங்கிய 6.60 கோடி ரூபாயில் 5 கோடி ரூபாய் பணத்தை ஸ்டூடியோ கிரீன் திருப்பி கொடுத்துவிட்டது.
இந்நிலையில் மீதமுள்ள 1.6 கோடி ரூபாயை கொடுக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும், அதுவரை அந்நிறுவனம் தயாரித்துள்ள கங்குவா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஃபியூயல் டெக்னாலஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (நவம்பர் 12) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டூடியோ கிரீன் சார்பில், “இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 1.60 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
மற்றொரு வழக்கு
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு எதிரான மற்றொரு வழக்கில், 20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கங்குவா படத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. படம் வெளியாக இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகள் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள் : எடப்பாடியை அட்டாக் செய்த ஸ்டாலின்
படுமோசமாக உள்ள டெல்லியின் காற்று… பொதுமக்கள் அவதி!
தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் : திமுக அரசை விமர்சித்த அன்புமணி