விஜய் சேதுபதி நடிக்கும் புது வெப் சீரிஸ்!

சினிமா

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரை அறிவித்துள்ளது.

இந்த வலைத்தள தொடரில் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை,கடைசி விவசாயி படங்களை இயக்கிய
எம்.மணிகண்டன் இயக்குகிறார்.

நடிகர் விஜய்சேதுபதி இவருடன் மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இந்த புதிய ஹாட் ஸ்டார் ஸ்பெஷல் வலைத்தள தொடர் படப்பிடிப்பு, இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.

7C’s Entertainment Pvt Ltd தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இராமானுஜம்

இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வெற்றிமாறனின் விடுதலை : வசூல் எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0