இயக்குநர் ராம்-நிவின் பாலி கூட்டணியின் புதிய அப்டேட்!

சினிமா

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் சூரியின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நிவின் பாலியின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (நவம்பர் 11) வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் நிவின் பாலி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீண்ட தலைமுடியுடன் நடிகர் நிவின் பாலி ஒரு இரும்புக் கம்பியைப் பிடித்திருப்பது போல் தோற்றம் அளிக்கிறார்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் மோடி

இதுதான் எங்கள் கொள்கை: பிரதமர் மோடி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0