New update of Hansika's 'Gandhari'!

ஹன்சிகாவின் ‘காந்தாரி’ படம் எப்போது ரிலீஸ்?

சினிமா

நடிகை ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா, தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து ஹன்சிகா நடித்து வருகிறார். அந்தவகையில், ஹன்சிகா நடிப்பில் அவரது 50 வது படமாக மஹா சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ‘சேட்டை’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணனுடன் ஹன்சிகா மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டு இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் படத்திற்கு ‘காந்தாரி’ எனப் பெயரிடப்பட்டது. இப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஹன்சிகா, மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், காந்தாரி படத்தில் ஹன்சிகா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண்ணாக இரட்டை வேடத்தில் நடக்கிறார்.

இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. 1943ஆம் ஆண்டில் நடந்த கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தாரி படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று (மே 31) படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும், இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எதையும் சந்திக்க தயார்?: பூத் ஏஜெண்ட் கூட்டத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

இந்தியா கூட்டணி கூட்டம்… – ஸ்டாலின் வெளியிட்ட மெசேஜ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *