new emotional song from naani's HI NANNA

தாயாக மாறிய நானி… ’ஹாய் நான்னா’ புது பாடல் ரிலீஸ்!

சினிமா

தெலுங்கு சினிமாவில் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் ஃபேவரைட் ஹீரோவானவர் நடிகர் நானி. இவர் நடிப்பில் தமிழில் வெளியான வெப்பம், நான் ஈ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவிலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தசரா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் நானி நடித்துள்ள படம் “ஹாய் நான்னா”.

அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில், வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

அப்பா மகளின் உறவை மையமாக வைத்து ஹாய் நான்னா படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Glimpse வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு ஹாய் நான்னா படத்திலிருந்து “Samayama” என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக் குழு வெளியிட்டது. அந்தப் பாடல் “நிழலிலே” என தமிழிலில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் அடுத்த பாடலை வெளியிட்டுள்ளது படக் குழு. “Gaaju Bomma” என தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று வெளியிட்டார். இந்த பாடல் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியிடப் பட்டுள்ளது.

“கண்ணாடி கண்ணாடி” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தெலுங்கு பாடலின் தமிழ் வெர்ஷன் லிரிக்ஸ் வீடியோவை  நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருக்கிறார்.

அப்பா மகள் இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”ரோகிணி தியேட்டர் சேதம்… போலீஸ் காரணம்”: நீதிபதிக்கு அரசு தரப்பில் விளக்கம்!

154 சவுக்கடி பெற்ற போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *