நடிகை ரவீனா தாண்டன் தன் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயத்தை கடைப்பிடித்து வந்தார். அதாவது, நடிகர்களுடன் முத்தக்காட்சிகளில் நடிப்பதில்லை என்பதுதான். என்னது , கமல்ஹாசனுடன் நடித்த போதும் முத்தக்காட்சி கிடையாதா? ஆமாம் உண்மைதான். கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்த போதும் முத்தக்காட்சி இடம் பெற்றதில்லை.
இது தொடர்பாக பாலிவுட் சேனல் ஒன்றுக்கு ரவினா தாண்டன் இப்போது கூறியிருப்பதாவது, ‘நான் ஒரு நடிகருடன் நடித்த போது, ரொம்ப குளோசப் காட்சியில் தெரியாமல் அந்த நடிகர் முத்தம் கொடுத்து விட்டார். எனக்கு அருவெறுப்பாகி விட்டது. உடனே , அறைக்குள் ஓடி சென்று முகத்தை நன்றாக கழுவினேன். பல் துலக்கினேன். இது, எனக்கு அநாகரீமாக அது தெரிந்தது. இந்த பிரச்னையை உணர்ந்து கொண்ட அந்த நடிகர் என்னிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டார்.
இப்போது, எனது மகள் ராஷா பெரியவளாகி விட்டாள். அவளும் சினிமாவுக்குள் வருகிறார். முத்தக் காட்சியில் நடிக்க கூடாது என்பது எனது கொள்கை. இதை நான் என் மகளிடம் அறிவுறுத்துவேன். நெருடலாக உணரும் காட்சிகளில் நடிக்க கூடாது என்று கூறுவேன். எனினும், இறுதி முடிவு எடுப்பது அவளின் கையில்தான். எனது கருத்தை அவளிடத்தில் திணிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரவீனா தாண்டன் 1991 ஆம் ஆண்டு ‘பதேர் கி பூல்’ இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் சாது என்ற படத்தில் அர்ஜூனுடன் முதன் முதலாக நடித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழில் ‘ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது, ரவீணாவுக்கு 52 வயதாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்