2024 ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ள படங்களின் பட்டியலை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனம் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
அந்த பட்டியலில் இந்திய ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல முக்கிய திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2, பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான்,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 21, குரங்கு பெம்மை பட இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா,
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் கண்ணிவெடி, கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் Revolver ரீட்டா,
RJ பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் ஆகிய தமிழ் படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2, ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக உள்ள VD 12,
பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் NBK 109 , கொராட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா பார்ட் 1,
தமிழில் டார்லிங், 100 போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டர்சன் இயக்கத்தில் அல்லு சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள Buddy,
ஸ்டார் பாய் சித்து நடிப்பில் உருவாகியுள்ள தில்லு 2 ஆகிய தெலுங்கு மொழி படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த படங்கள் அனைத்து திரையரங்குகளில் வெளியான பிறகு தான் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை முதல்வராவது நடக்காத விஷயம்: ஜெயக்குமார்
திராவிட ஆட்சியில் திருவள்ளுவர் புகைப்படம் மாற்றப்பட்டதா?