2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கொரியன் என பல மொழிகளில் ஜீத்து ஜோசபின் திரிஷ்யம் படம் ரீமேக் ஆனது. இந்த படத்தில் மோகன் லால் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிக பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
இதனை தொடர்ந்து மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் “ராம்” என்ற படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் ராம் படத்திற்கு முன்பாக மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் மற்றொரு படம் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு “Neru” என்று டைட்டில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 9) Neru படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் மோகன் லால் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சில தனிப்பட்ட காரணங்களுக்காக எந்த வழக்கிலும் ஈடுபடாமல் இருக்கும் மோகன் லாலுக்கு ஒரு வழக்கில் வாதாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அந்த வழக்கினால் வரும் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து இறுதியாக அந்த வழக்கில் மோகன் லால் ஜெயித்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் ஒன் லைன்.
Neru படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லாலுடன் இணைந்து நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாந்தி மாயா தேவி மற்றும் ஜீத்து ஜோசப் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளனர். தற்போது நேரு படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!
வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!