நெல் பூக்க , கல் பூக்க , வில் பூக்க…பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள்!
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள், “பொன்னி நதி” இன்று (ஜூலை 31) மாலை ரிலீஸ் ஆகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் இசை உருவாக்க வீடியோவை , தனது பேஸ்புக் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமில்லாமல், விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “பொன்னி நதி” என பெயரிடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள், தற்போது வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடி உள்ளார். பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதி உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்