படமாகும் இந்தியாவின் முதல் பெண் உளவாளியின் கதை!

சினிமா

கன்னட சினிமா வணிக ரீதியாகவும், படைப்பு அடிப்படையிலும் இந்திய சினிமாவில் கவனத்திற்குரியதாக மாற்றம் கண்டு வருகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சியில் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்று போராடியவர் காந்தி.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். அவரது தலைமையில் இயங்கிய ராணுவத்தில் முதல் பெண் உளவாளியாக பணியாற்றியவர் நீரா ஆர்யா.

ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே பெண்கள் உளவாளிகளாக பார்த்துள்ள இந்திய சினிமா ரசிகர்களுக்கு சுதந்திர போராட்ட காலத்திலேயே இந்திய பெண்கள் உளவாளிகளாக பணியாற்றிய வரலாற்றை கன்னடத்தில் திரைப்படமாக்க உள்ளார் நடிகையும், இயக்குநருமான ரூபா அய்யர்.

இந்த படத்தில் இந்தியாவின் முதல் பெண் உளவாளியான நீரா ஆர்யாவாக ரூபா அய்யாரே நடித்து இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே கன்னடத்தில் ஐந்து திரைப்படங்களை தயாரித்தும் நான்கு படங்களை இயக்கியும் உள்ளார்.

கர்நாடக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை இரண்டுமுறை பெற்றுள்ளார்.

நீரா ஆர்யாவாக நடித்து படத்தை இயக்கும் ரூபா அய்யர் படம் பற்றி கூறுகையில்,

“நாம் கொண்டாட வேண்டிய ஒரு தேசப்போராளியின் சரித்திர கதையில் நான் நடிக்கிறேன். சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி நீரா.

அவரது கணவர் ஆங்கிலேயர்களிடம் வேலை செய்த போதிலும், அவர் நாட்டிற்காக போராடினார். சுபாஷ்சந்திரபோஸின் இருப்பிடம் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன. தேசத்துக்காக தன் கணவனையே கொன்றவர். ஆனால் தன் கடைசி காலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தியவர்.

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படுகிறது 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. லண்டன் மற்றும் அந்தமான் சிறையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது” என்றார்.

இராமானுஜம்

கிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு பேல்!

தொடரும் கனமழை: எங்கெங்கு விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *