நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் இருந்து
இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை அப்படக்குழு அறிவித்துள்ளது.
‘காதல் ஃபெய்ல்’ என்கிற இந்தப் பாடல் வரும் நவ.25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் தற்கால 2கே கிட்ஸ்களின் காதல் தோல்வி பாடலாக இருக்கும் என வெளியீட்டு போஸ்டரில் ‘Gen-Z soup song’ என்கிற வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் படலான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை யூடியுபில் சுமார் 83 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, ‘அசுரன்’, ‘பொல்லாதவன்’, ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்தரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா காட்டூன். ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….