உயர்நீதிமன்றத்தில் வழக்கு : நயன்தாரா பதிலால் தனுஷ் தரப்பு ஷாக்!

சினிமா

சமீபத்தில் நயன்தாரா திருமணம் பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்சில்   வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை. ஆனாலும், அதையும் மீறி நயன்தாரா பயன்படுத்தியதாக தனுஷ் தரப்பு குற்றம் சாட்டியது.

ஆவணப்படத்தின் டிரெய்லரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்காக  10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, கோபமடைந்த நயன்தாரா, தனுஷை அடுத்தவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்கிற ரீதியில் அறிக்கை வெளியிட்டு விமர்சித்தார். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், தன் முடிவில் இருந்து நடிகர் தனுஷ் பின்வாங்கவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நயன்தாராவை பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக  நயன்தாராவின் வழக்கறிஞர் ராஜேஷ் தவான் கூறுகையில், ‘எங்களது கிளையன்ட் எந்த காப்பி ரைட் முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பெர்சனல் லைப்ரேரியில் இருந்தே இந்த காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது. தனுஷின் வாண்டர்பார் நிறுவனத்தில் இருந்து எந்த வீடியோவையும் எங்கள் தரப்பு பெறவில்லை.

ஆவணத் தொடரில் நாங்கள் பயன்படுத்தியவை திரைக்குப் பின்னால் இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. எனவே இது விதி மீறல் அல்ல. தனுஷின் சட்டரீதியான  நோட்டீசுக்கு எங்கள் தரப்பு  முறையாகப் பதிலளித்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி மீண்டும் வரும்  என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கல்விதுறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

கல்விதுறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *