தமிழ், மலையாளம், தெலுங்கு பல மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தையும் நயன்தாரா ஈர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது நயன்தாராவின் 75 படமான “அன்னபூரணி” ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 27 ஆம் தேதி) அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஒரு சிறந்த செஃப் ஆக வேண்டும் என்று கனவு காணும் பெண், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பம், ஒரு பிராமண பெண் மாமிசம் சமைப்பது தவறா? என்ற கேள்வியும் குழப்பங்களும் என பல தடைகளை தாண்டி எப்படி அந்த பெண் தனது லட்சியத்தை அடைய போகிறாள் என்பதே அன்னபூரணி படத்தின் ஒன் லைன்.
அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 01 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தொடர்பா?: அதானி குழுமம் விளக்கம்!
நானிக்கு குரல் கொடுத்த துருவ் விக்ரம்..!
துருவ நட்சத்திரம் டிசம்பர் 08 ஆம் தேதி ரிலீஸ்?
இன்னும் 3 மாதத்தில் திமுக கூட்டணி உடையும்: ஜெயக்குமார் உறுதி!
வீட்டுக்குள் புகுந்து மூன்று வயது குழந்தையை கடித்து குதறிய 3 தெரு நாய்கள்!