நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, ஜெய் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியான படம் அன்னபூரணி. இது நடிகை நயன்தாராவின் 75-வது படமாகும்.
இந்து பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா செப் ஆக ஆசைப்படுவது தான் அன்னபூரணி படத்தின் கதை.
இதில் நயன்தாரா கதாபாத்திரம் அசைவ உணவுகளை சமைப்பது, சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனால் இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலங்கி என்பவர் மத உணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது என, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் படத்தினை தயாரித்த ஜி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதில், ” படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் இந்து மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
அன்னபூரணி படத்தினை தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து திரும்பப் பெறுகிறோம். சர்ச்சைக்குரிய காட்சிகள் திருத்தப்பட்டு மீண்டும் படம் வெளியிடப்படும்,” என தெரிவித்துள்ளது.
அன்னபூரணி விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக படக்குழு மீது மும்பை காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார் அளித்து, அதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓபிஎஸ் தரப்பில் வினோதமான வாதம்: இன்பதுரை
ஓபிஎஸூக்கு தொடர் பின்னடைவு: கே.பி.முனுசாமி விமர்சனம்!
Comments are closed.