நடிகை நயன்தாராவுக்கும் தனக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 9) மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 மணிக்கு, “நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இந்த அறிவிப்பைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அதே நேரம் அதை விட அதிகமாக ஆச்சரியமும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே பேசி பேசி மாய்ந்து போகும் அளவுக்குப் பிரம்மாண்டமாக நடந்தது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.
திருமண விழா கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய்க்குப் பெற்றிருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் இன்னமும் கல்யாண ஆல்பத்தையே ரிலீஸ் செய்யாத நிலையில்,
நயன் விக்னேஷ் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என்ற செய்தி சமூக தளங்களில் மிக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாகவே திருமணம் நடந்து பெரியோர்களிடம் ஆசி வாங்கும் போது, ‘10 மாசத்துல ஒரு குழந்தைய பெத்துக்கொடு’ என ஆசிர்வதிப்பார்கள்.
ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் நடந்து 4 மாதங்களே ஆகும் நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நயன்தாராவுடன் துபாய் நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் விக்னேஷ் சிவன்.
அதன் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களில் கூட நயன்தாரா கர்ப்பம் தரித்தது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், நயன்தாராவுடன் சினிமா பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்தார் நடிகர் ஷாருக்கான்.
இந்தநிலையில் தான் இன்று (அக்டோபர் 9) நானும் நயனும் அப்பா அம்மா ஆகிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அதேபோன்று நயன் விக்னேஷ் தம்பதியினரும் வாடகை தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம் என்றும் சமூகத் தளங்களில் விவாதங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
பிரியா
“நிதிஷ்குமார் வயது முதிர்வால் பதட்டத்தில் பேசுகிறார்” : பிரசாந்த் கிஷோர்
டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி