நயனுக்கு இரட்டை குழந்தை: அன்றே கணித்த சினிமா ஜோதிடர்!

சினிமா

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று (அக்டோபர் 9) மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 மணிக்கு, “நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வி .வி விநாயக் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அதர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜோதிடராக வரும் என்.டி.ஆர் நயன்தாராவை பார்த்து “ கவலைப் படாதே உனக்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும்” என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதை பார்த்த அவரது ரசிகர்கள் “ அன்றே கணித்த என் தலைவன் என்.டி.ஆர்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் விக்னேஷின் ஆசைப்படி இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர்.

நயன் விக்கிக்கு டிடி வாழ்த்து!

மம்முட்டியை கண்டித்த கீர்த்தி சுரேஷ் தந்தை!

+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *