நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண வீடியோ விரைவில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் 2022 ஆம் ஆண்டு கோலாகலமாக நடந்தது. இந்த திருமண நிகழ்வை ஒரு ஆவணப் படமாக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதற்கான உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியது. இந்தப் படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான் ‘ படத்தின் படப்பிடிப்பில் தான் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில், நெட்ஃபிலிக்ஸ் வெளியிட உள்ள நயன் தாரா – விக்னேஷ் சிவன் கல்யாண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மேக்கிங்கில் எடுக்கப்பட்ட சில காணொலிகள் இடம்பெற்றுள்ளது.
ஆகையால், அதற்கான காப்புரிமை தன்னிடத்தில் உள்ளது என என்.ஓ.சி கொடுக்க மறுத்தார் தனுஷ். இதைத் தொடர்ந்து, அந்த திருமண வீடியோவின் நெட்ஃபிலிக்ஸ் வெளியீடு வெகு நாட்களாக தள்ளிப் போனது.
ஆனால், தற்போது தனுஷிடம் இருந்து என்.ஓ.சி – ஐ நயன் – விக்கி தம்பதி வாங்கி விட்டனர் என தெரிகிறது. ஆக, தீபாவளி வெளியீடாகக் கூட இந்த திருமண வீடியோ வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
ரூ.20 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை முன் அசாருதீன் ஆஜர்!
ஜம்மு காஷ்மீர் முதல்வராகிறார் ஓமர் அப்துல்லா
ஹரியானா தேர்தல்: பாஜக சூழ்ச்சி செய்து வெற்றி… காங்கிரஸ் குற்றச்சாட்டு!