நடிகர் மாதவன் மிக மிக விலை உயர்ந்த சொகுசு படகு ஒன்றை வைத்துள்ளார். 40 அடி நீளம் கொண்ட இந்த படகின் விலை 14 கோடி என்று கூறப்படுகிறது.
தனது எழுத்துப்பணிகளுக்கும் ஓய்வு எடுக்கவும் அவர் பயன்படுத்தி வருகிறார். இந்த படகை இயக்க 6 மாதம் அவர் பயிற்சி பெற்றதாகவும் அதற்காக லைசென்சு பெற்றுள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.
இந்த படகில் அனைத்து விதமான நவீன வசதிகளும் உள்ளன. இந்த நிலையில் , புத்தாண்டு கொண்டாட நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றுள்ளார். நடிகர் மாதவனும் துபாயில் தனது படகில்தான் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி மாதவனுக்கு சொந்தமான படகில் ஓய்வெடுத்து, புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் மாதவனின் மனைவி சரிதா, தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், படகின் முன் பகுதியில் போர்வை மூடிக் கொண்டு மாதவன், நயன்தாரா, சரிதா, விக்னேஷ் சிவன் ஆகியோர் உள்ளனர். அந்த படத்துக்கு ‘அழகான மக்களுடன் அழகான நினைவுகள் மகிழ்ச்சிகரமான 2025 ‘என்று சரிதா கேப்ஷனாக கூறியுள்ளார். நயன்தாரா, ‘மாதவன் சார் மற்றும் சரிதா மேம் உடன் இனிமையான தருணங்கள் என்றும் அன்பான மனிதர்கள் தங்களை சுற்றி இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் மாதவன் நயன்தாராவுடன் இணைந்து டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சசிகாந்த் இயக்கும் ,இந்த படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்