‘சினிமாவை விட்டு விலக சொன்னார்’ : நயன்தாரா யாரை சொல்கிறார்?

Published On:

| By Kumaresan M

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது, அந்த திருமணம் பற்றி ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

ஆவணப்படத்தில் நயன்தாரா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது பற்றியும் கூறியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு  பாலகிருஷ்ணாவுடன் “ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து நயன்தாரா ஆவணப்படத்தில் கூறியிருப்பதாவது, ‘ ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தில் கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது. எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, நான் மிகவும் விரும்பியதும் இதுதான்.

அப்படியான சினிமாவை விட்டு வெளியேறுவது என்பது நினைக்கவே முடியாதது. ஆனால், நான் திரைத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்ய காரணம், என்னை திருமணம் செய்யவிருந்தவர்தான். அவர், என்னை சினிமாவில் இருந்து விலக சொன்னதுதான்.

சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல. ஆனால், அவர் ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என்று  சொல்லிவிட்டார். எனக்கு வேறு வழியே இல்லை. அப்படியான வலிதான் என்னை காயப்படுத்தியது.

கீழே விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும். யாரெல்லாம் உங்களை மோசமாக நடத்தினார்களோ, அவர்கள் ஒவ்வொரு நாளும்  உங்களை பார்த்து உங்களுக்கு செய்த மோசமான விஷயங்களை பார்த்து வருத்தப்படும் அளவுக்கு, அவர்கள் வேதனைப்படும் அளவுக்கு எழுந்து நிற்க வேண்டும்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 அவள், இவள்…. ஜோதிகாவை வறுத்து எடுக்கும் சுசித்ரா

சர்ச்சைப் பேச்சு… ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுத்தாக்கல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share