அன்னபூரணி பட சர்ச்சை: நயன்தாரா வருத்தம்!

Published On:

| By christopher

Nayanthara regrets Annapoorani controversy

Nayanthara regrets Annapoorani controversy

நடிகை நயன்தாராவின் 75 ஆவது படமான “அன்னபூரணி” படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நிறைய வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால்  நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன், ”இந்திய இயக்குனர்களுக்கு படைப்பு சுதந்திரம் இல்லை. இது இந்திய திரைத்துறைக்கு ஆபத்து” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அன்னபூரணி படம் சர்ச்சைக் குறித்து அந்த படத்தின் நாயகி நயன்தாரா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’ஜெய் ஸ்ரீ ராம்’ என தொடங்கும் அந்த அறிக்கையில்,

“எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி இருப்பது குறித்து கணத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம்.

மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTT யில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.

Image

மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவிற்கும் துணியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாடு தலங்களுக்கும் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்து இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மையான எண்ணங்களை பரப்புவதும் மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வது மட்டுமே என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

பியூட்டி டிப்ஸ்: வியர்வையால் வேதனையா? எளிய தீர்வுகள் இதோ…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Nayanthara regrets Annapoorani controversy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share