தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்த ஜவான் படம் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ஹிந்தி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நயன்தாராவுக்கு என ஒரு தனி கிரேஸ் உருவாக்கி விட்டது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிந்தி பட வாய்ப்புகளும் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வேறு எந்த புதிய ஹிந்தி படங்களிலும் நயன்தாரா கமிட்டாகவில்லை என சொல்லப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட்டில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்க போகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்க போகும் அந்த புதிய படத்திற்கு “பைஜு பாவ்ரா” (Baiju Bawra) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். தற்போது இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நீதிமன்ற தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ