ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘தான் மல்லாக்கவே படுக்க மாட்டேன்’ என்றும் அதற்கு அவர் சொல்லி உள்ள காரணமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண்களை மையமாக கொண்ட படங்கள் குறித்தும், பெண்களுக்கு திருமணம் என்பது ஒரு இன்டர்வெல் இல்லை என அவர் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தனக்கு பேய் மீதெல்லாம் பயம் இல்லை என்று சொல்லி விட்டு நயன்தாரா போட்ட லிஸ்ட் தான் அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.
பெண்களுக்கு திருமணம் என்பது இடைவேளை கிடையாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை. திருமணம் ஒரு மகிழ்ச்சியான உணர்வு அவ்வளவு தான்.
அதன் காரணமாக பெண்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.
நயன்தாராவுக்கு உண்மையிலேயே பேய் மீது நம்பிக்கை இருக்கா? என்றும் பேய் பயம் இருக்கா என டிடி நீலகண்டன் நிறைய கேள்விகளை கேட்டு அவரது பதில்களை அழகாக வெளிக் கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என சொன்ன நயன்தாரா அடுத்தடுத்து பேசியது தான் ரசிகர்களை திகில் அடைய செய்தது.
’சின்ன வயசுல யாரோ சொன்னதை கேட்டுட்டு அதன் பின்னர் மல்லாக்க படுக்கவே மாட்டேன், ஒன் சைடாக கை வச்சுத் தான் தூங்குவேன்’
என நயன் சொன்னதும் ஏங்க என கேட்ட டிடிக்கு செம ஷாக் கொடுத்தார் நயன்தாரா.
’நேரா படுத்தா யாராவது நம் மேல வந்து அப்படியே இறங்கிடுவாங்க தூங்கும் போது எப்பவுமே லைட் ஆஃப் பண்ணாமத்தான் படுப்பேன்’ என தனது பேய் பயம் குறித்த லிஸ்ட்டை நயன்தாரா அடுக்கிக் கொண்டே செல்ல அதை கேட்ட ரசிகர்கள் இவரது பேட்டியே செம த்ரில்லாக இருக்கே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கனெக்ட் திரைப்படத்தில் ஹாரருக்கு குறைவே இல்லை என விமர்சனங்களும் குவிந்து உள்ளன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சென்னையில் உறைய வைக்கும் பனி: வாகன ஓட்டிகள் அவதி!