சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசு வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநா் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் – நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது. வாடகை தாய் சட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் விசாரணை மேற்கொண்டு சட்டத்தின்படி தான் குழந்தை பெற்றதாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இரட்டைக் குழந்தைகள் பிறந்து முதல் புத்தாண்டை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இந்தாண்டு கொண்டாடியுள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளுடன் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனிடையே, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் குழந்தைகளை சந்தித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசுகளை வழங்கியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகளை சமூகவலைதளங்களில் நயன்தாரா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைச்சரவை கூட்டம்: முதன் முறையாக பங்கேற்கும் உதயநிதி
தமிழகம்: காலையிலேயே ஐடி ரெய்டு!