நயன்தாராவின் கனெக்ட் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

சினிமா

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் இன்று (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சத்யராஜ், வினய் ராய், அனுபம்கெர் உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரர் கலந்த பேய் கதையாக கனெக்ட் திரைப்படம் உருவாகி உள்ளது.

இன்று காலை 5 மணிக்கு கனெக்ட் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானதிலிருந்து படத்திற்கு அதிகளவில் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளது.

கனெக்ட் திரைப்படம் நல்ல சவுண்ட் எஃபெக்டுடன் உள்ளதாகவும் நிச்சயமாக இந்த திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், படத்தில் ஹாரரர் சீன் நன்றாக உள்ளதாகவும், வழக்கமான கதை அம்சத்துடன் படம் உள்ளதாகவும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் கனெக்ட் திரைப்படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வதாகவும், தங்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

செல்வம்

உதயநிதியால் எனக்கு பாரம் குறைந்தது: அமைச்சர்!

கட்சி சின்னம், பெயர் விவகாரம்: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *