’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!

சினிமா

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு உட்பட நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை பதிவு செய்துள்ள ஆவணப் படமான ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடந்தது. அதைத்தொடர்ந்து, இதுகுறித்தான ஆவணப் படம் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி, பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.

பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகவுள்ளது. இந்த ட்ரெய்லரில் கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ராதிகா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா , ராணா உட்பட பல திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். நயன்தாராவின் திரை வாழ்க்கை, அவர் கடந்த வந்த பாதை, அவரை நோக்கி எழும்பிய சர்ச்சைகள், விக்னேஷ் சிவன் மீதான காதல் உட்பட அவர் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை இந்த ஆவணப் படம் பேசியுள்ளது இந்த ட்ரெய்லரில் தெரியவருகிறது.

சராசரி ஆவணப் படம் போல் இல்லாது ஏறத்தாழ ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதையோடு இந்த ஆவணப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் வருகிற நவ.18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சித்தார்த், மாதவன் நடித்து உருவாகி வரும் ‘டெஸ்ட்’, கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் – 2’ படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ ! : ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவராஜ்குமாருக்கு மருத்துவ சிகிச்சை! : காரணம் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *