மாயா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய வெற்றிகளை பதிவு செய்தவர் நடிகை நயன்தாரா.
சமீபத்தில் நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து ஹிந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்ததாக பிரபல ஹிந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன்தாரா நடிக்க போகிறார் என்றும் சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 75வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜீ ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நயன்தாரா 75 படத்திற்கு “அன்னபூரணி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டைட்டில் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் Glimpse வீடியோவும் வெளியாகி இருக்கிறது. பிராமண வீட்டு பெண்ணாக அறிமுகமாகும் நயன்தாரா சிக்கன் சமைப்பது குறித்து நோட் எடுப்பது போல் Glimpse வீடியோவில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
மாலை 5.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நயன்தாரா 75 அப்டேட் சில தொழில்நுட்ப கோளாறு காரணத்தினால் இரவு 7.02 மணிக்கு தான் வெளியானது. இதனால் ரசிகர் சற்று கடுப்பானாலும் Glimpse வீடியோவை பார்த்த பிறகு நயன்தாராவிற்கு ஹார்ட் எமோஜிகளை பறக்கவிட்டு கொண்டிருக்கின்றார்கள்.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சிங்கப்பூர் செல்லும் ஓ.பன்னீர்: மெடிக்கலா, பொலிடிக்கலா?