நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள தகவலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த நிமிடம் முதல், அச்செய்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி, ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
நயன் மற்றும் விக்கி, தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்தவுடன், பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதே நேரம், வாடகை தாய் மூலம், சட்டபூர்வமாக குழந்தை பெற்றுள்ளனரா என்ற விவாதமும் அனல் பறக்கின்றது.
காரணம், வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 படி திருமணமாகி ஐந்து வருடம் ஆன தம்பதிகள் மட்டுமே வாடகை தாய் முறையை பயன்படுத்த முடியும்.
அனால், நயன் மற்றும் விக்கி இருவருக்கும் இந்த வருடம் ஜூன் 9 ஆம் தேதி தான் திருமணமே நடை பெற்றது.
அப்படியிருக்க, அவர்கள் சட்டத்தின் விதிமுறையை மீறி எப்படி வாடகை தாய் முறையை உபயோகித்திருக்க முடியும் என்ற கேள்வி பலராலும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.
இது குறித்து நடிகை கஸ்தூரி, சமூக வலைத்தளமான ட்விட்டரில்,
“வாடகை தாய் குறித்த விவாதம் வரும் நாட்களில் பரவலாக மேற்கொள்ளப்படும் எனவும், ஒரு வழக்கறிஞராக, பொதுநலன் கருதி, இவ்விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் எனவும், திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்த தம்பதிகளே வாடகை தாய் முறையை பயன்படுத்த தகுதியுள்ளவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பழைய சட்டத்தின் படியே நயன்- விக்கி தம்பதி வாடகை தாய் முறையினை உபயோகப்படுத்தியிருந்தாலும், அவர்கள் அப்போது திருமணம் செய்திருக்க வில்லை என்பதும் சட்ட சிக்கலாக மாற வாய்ப்புள்ளது என்றும் விவாதிக்கப்படுகிறது.
இவ்விவகாரத்தில், தெளிவு வேண்டுமெனில், நயன்தாரா விக்னேஷ் தம்பதிகள் தரப்பிலிருந்து வாடகை தாய் குறித்து முழுமையான விளக்கம் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
எது எப்படியோ, நயன் – விக்கி வாழ்வில், காதல் முதல், குழந்தை பிறப்பு வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லை.
வினோத் அருளப்பன்
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்!