மாற்றப்பட்ட தேசிய சினிமா தினம்: ஏன் தெரியுமா?
இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது.
இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் செப்டம்பர் 16ஆம் தேதியை,
தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது.
அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 எனவும் கூறியிருந்தனர்.
இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்துக்கு பாய் காட் ட்ரெண்டிங்கை புறம் தள்ளி இந்திமொழி பேசும் மாநிலங்களில் வரவேற்பும் வசூலும் அதிகரித்து வருகிறது.
அதிக பட்ஜெட்டில் உருவான அதன் வசூல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
ராமானுஜம்
பிரம்மாஸ்திரா மீது கங்கணாவின் அஸ்திரங்கள்!