பா.ரஞ்சித் படத்தின் ‘ரங்கராட்டினம்’ இன்று வெளியீடு!

Published On:

| By Selvam

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரங்க ராட்டினம் பாடல், இன்று (ஆகஸ்ட் 8) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் தனது படைப்புகளில் சாதி அரசியலை மிகவும் துணிச்சலாக பேசியிருப்பார். இவருடைய அடுத்த படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா, இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்தவர்களின் அறிமுக வீடியோ, சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் தன் பால் ஈர்ப்பாளர்களின் வாழ்வியலையும், காதலையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை 6 மணிக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் பாடல் ரங்கராட்டினம் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை, இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில், புத்தருடைய படம் இடம் பெற்றுள்ளது. புத்தருடைய கருத்துகள் ரங்கராட்டினம் பாடல் வரிகளில் இடம் பெற்றிருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share