இந்த வருடம் இந்திய சினிமாவில் மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படங்கள் மாநில எல்லை கடந்தும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன.
அந்தவகையில், பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பிரேமலு’.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
திரையரங்கில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஏப்ரல் 12-ஆம்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இந்த நிலையில், பிரேமலு படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும், 2025-ம் ஆண்டு ‘பிரேமலு-2’ ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம் கோலாகலம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை
“ஒரு பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்கு” : தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?