தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தனது படங்களில் பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தி நடித்த கைதி படத்தை கமல் ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இந்த டிரெண்டை தொடங்கி வைத்தார் லோகேஷ். லோகேஷின் இந்த ஐடியா ரசிகர்களுக்கு பிடித்துபோக இனி லோகேஷ் இயக்கும் படங்களை Lokesh Cinematic Universe அதாவது LCU என்று பிராண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.
விக்ரம் படத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்யின் லியோ படத்தையும் LCU படங்களுக்குள் இணைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் லோகேஷ்.
LCU- வின் அடுத்த படமாக கைதி 2 வெளியாகும் என்று லோகேஷ் அறிவித்திருந்தார். இதற்கிடையில் தலைவர் 171 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது அந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பட புரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் நரேன் LCU குறித்த ஒரு சூப்பர் தகவலை கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் படங்களில் பிஜாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நரேன், அடுத்து LCU படம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, லோகேஷ் கனகராஜூம் நானும் இணைந்து ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார். அந்த 10 நிமிட ஷார்ட் ஃபிலிம் LCU வின் தொடக்கம் குறித்து ரசிகர்களுக்கு விளக்கும் படி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கூடிய விரைவில் அந்த ஷார்ட் ஃபிலிம் வெளியாகும் என்றும் கூறினார்.
மேலும் கைதி 2 படத்திற்கு பின் விக்ரம் 2 படம் வெளியாகும் அந்த படம் தான் LCU வின் இறுதியாக இருக்கும் என்று முதலில் லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் தற்போது லியோ 2 படம் தான் LCU வின் இறுதி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று மாதங்களுக்கு ஆதார் அப்டேட் இலவசம்: வெளியான அறிவிப்பு இதோ!
டிடிவி தினகரன் பிறந்தநாள்: கூட்டணி வடிவம் பெறுமா வாழ்த்து?