நானியின் ‘தசரா’ ரிலீஸ் தேதி!

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படம் வெளியாகும் தேதியைப் படக்குழு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் நானி தற்போது தசரா என்னும் படத்தில் நடித்துள்ளார். எஸ்.எஸ்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியானது.

நேற்று (ஆகஸ்ட் 25) படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது, ஆக்‌ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

மோனிஷா

‘கோப்ரா’ படத்தில் என்ன ஸ்பெஷல் – துருவ் கேள்வி -விக்ரம் பதில்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts