நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”. இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ஹாய் நான்னா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Glimpse வீடியோ, இரண்டு பாடல்கள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது ஹாய் நான்னா படத்தின் டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது.
அப்பா மகள் இடையே ஒரு ஜாலியான உரையாடலில் தொடங்கும் இந்த டீசர், அடுத்ததாக மிருணாள் தாகூர், நானி இடையே உள்ள காதல், அதனால் வரும் பிரச்னைகள் என உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்கள் பற்றி பேசும் ஒரு எமோஷனல் டிராமா படமாக உருவாகி இருக்கிறது ஹாய் நான்னா.
இந்தப் படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹாய் நான்னா படத்திற்கு முன்பே நானி நடித்த சில எமோஷனல் டிராமா படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்திருந்ததால், நிச்சயம் இந்த படமும் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ஐந்து மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
விஜய் சேதுபதிக்கு “வில்லன்” ஜெயராம்: மிஷ்கின் பட அப்டேட்!