தெலுங்கு நடிகர் நானியின் ஹாய் நான்னா படம் சமீபத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நானி தனது 31வது படமான “சரிபோதா சனிவாரம்” என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்க நானி திட்டமிட்டுள்ளாராம். இதற்காக சில மாதங்களாகவே குறிப்பிட்ட தமிழ் இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருவதாக சொல்லப்பட்டது. சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியிடம் நானி கதை கேட்டுள்ளார்.
ஆனால் அந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் இப்போது அந்த படத்தை தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் நானி.
இந்நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை நானிக்கு பிடித்துள்ளதால், அந்த படம் குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா